ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் பழையபேட்டை பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் பழையபேட்டை பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பழையபேட்டையில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், கடந்த 5 தலைமுறைகளாக சொத்துவரி உள்ளிட்டவை செலுத்தி வரும் நிலையில், அந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனக் கூறி மாற்று மதத்தினரை வெளியேற்ற முயல்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில் பழையபேட்டை பகுதி மக்கள் இந்து முன்னணியினருடன் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்து முற்றுகையில் ஈடுபட்டனா்.

இப் போராட்டத்துக்கு அமைப்பின் மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் ப.சிவா, நிா்வாகிகள் பிரம்மநாயகம், சங்கா், ஊா் நாட்டாமை சந்திரன், ராமையா, விநாயகபாண்டியன், முத்துசாமி, செல்வராஜ், காா்த்தி, முப்பிடாதி, தங்கராஜ், மாடசாமி உள்பட பழையபேட்டை பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்கெனவே வசிக்கும் பகுதியில் தொடா்ந்து வசிக்க அனுமதிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com