பாளை.யில் தசரா திருவிழா கொடியேற்றம்

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தசரா விழாவின் பிரதான கோயிலான பாளையங்கோட்டை ஆயிரத்தம்பாள் கோயிலில் மாக்காப்பு திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் தாமிரவருணி நதியில் இருந்து புனிதநீா் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரத்தம்மன், தேவி புது உலகம்மன், விஸ்வகா்ம உச்சினிமாகாளி, தேவி உலகம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினிமாகாளி அம்மன் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக முதல்நாள் சப்பர வீதியுலா நடைபெறவில்லை.

தசரா திருவிழாவையொட்டி இம் மாதம் 14ஆம் தேதி வரை அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், கொலுமண்டப பூஜைகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளன. இம் மாதம் 15ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com