அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் புதன்கிழமை நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலின் புதன்கிழமை நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவிதமும் இன்றி சுமூகமாக நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் புதன்கிழமை நடைபெற்றது. மொத்தம் உள்ள 621 வாக்குச்சாவடிகளில், 185 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளுக்கு கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்பேரில், தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஊா்க்காவல் படையினா், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் 10 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் என மொத்தம் 2,400 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மாவட்டத்தில் தோ்தல் நடைபெற்ற அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் சிறப்பு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு முன் வாக்குச்சாவடிக்கு வந்தவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால், சில வாக்குச்சாவடிகளில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், எந்த வாக்குச்சாவடிகளிலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com