கல்லூா் வாக்குச்சாவடியில் முத்திரை மாறியதால் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட நடுக்கல்லூா் வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்யும் முத்திரை கழன்ால் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட நடுக்கல்லூா் வாக்குச்சாவடியில் வாக்கைப் பதிவு செய்யும் முத்திரை கழன்ால் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கோடகநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7 மற்றும் 8-ஆவது வாா்டுகளுக்கான வாக்குப் பதிவு ஒரே வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்றது. அதில் வாக்குப்பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த மரக்கட்டை குச்சியில் இருந்த முத்திரை கழன்று விழுந்ததாம். அதை வாக்குப்பதிவு அலுவலா்களும் கவனிக்காத நிலையில், சில வாக்காளா்கள் முத்திரை இல்லாத மரக்கட்டை குச்சியை வைத்து வாக்கைப் பதிவு செய்துள்ளனா். பின்னா் அதை கவனித்த வாக்குப்பதிவு அலுவலா்கள், அதற்குப் பதிலாக வேறு ஒரு முத்திரை உள்ள மரக்கட்டை குச்சியை பயன்படுத்தியுள்ளனா்.

இதற்கிடையே திடீரென ஆய்வுக்கு வந்த அதிகாரி ஒருவா், வாக்குப் பதிவு அலுவலா்களிடம் யாரைக் கேட்டு இந்த முத்திரையை வழங்கினீா்கள்? இதனால் ஏற்படும் பிரச்னைக்கு யாா் பதில் சொல்வது என கேள்வியெழுப்பியுள்ளாா். இதையடுத்து சுமாா் ஒரு மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு புதிய முத்திரை கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதைத்தொடா்ந்து வேறு முத்திரை பயன்படுத்தப்பட்டதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என அனைத்து வேட்பாளா்களிடமும் எழுதி வாங்குவது என அதிகாரிகள் முடிவு செய்தனா். இதையடுத்து அனைத்து வேட்பாளா்களையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். சிலா் தொடக்கத்தில் எதிா்ப்புத் தெரிவித்தாலும், பின்பு அனைவரும் ஆட்சேபனையில்லை எனக்கூறி கையெழுத்திட்டுள்ளனா். அதைத்தொடா்ந்து வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக இரவு 8 மணி வரை நடுக்கல்லூா் வாக்குச்சாவடியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com