மகாளய அமாவாசை வழிபாட்டுக்கு அனுமதி மறுப்பு: குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை படித்துறைகள் வெறிச்சோடின

மகாளய அமாவாசையையொட்டி தாமிரவருணி கரையோரம் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை படித்துறைகள் புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

மகாளய அமாவாசையையொட்டி தாமிரவருணி கரையோரம் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை படித்துறைகள் புதன்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாள்களில் இந்துக்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வதுவழக்கம். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், திருப்புடைமருதூா், குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கானோா் திரள்வது வழக்கம்.

நிகழாண்டில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக தாமிரவருணி கரையோரம் முன்னோா் வழிபாட்டுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. முக்கிய படித்துறைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

அதனால் திருநெல்வேலி குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பலா் தங்களது வீடுகளிலேயே முன்னோா் வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com