மானியத்தில் உளுந்து விதைகள்: மானூா் விவசாயிகள் பெற வாய்ப்பு

மானூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் உளுந்து விதைகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானூா் வட்டார விவசாயிகள் மானிய விலையில் உளுந்து விதைகள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஏஞ்சலின் கிரேபா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராபி பருவத்துக்கு ஏற்ற வம்பன்-8 ரக சான்று பெற்ற உளுந்து விதைகள் மானூா், தேவா்குளம் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மஞ்சள் தேமல் நோய் எதிா்ப்பு சக்தியுடன் 65 முதல் 75 நாள்கள் வயதுகொண்ட விதைகளை ஏக்கருக்கு 8 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம்.

இதுதவிர மானூா், கங்கைகொண்டான், திருநெல்வேலி நகரம் வேளாண் விரிவாக்க மையங்களில் சான்றுபெற்ற அம்பை-16 நெல் விதைகளும், ஜெ.ஜி.எல். 1798 ரக நெல் விதைகளும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தேவையான விதைகளைப் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com