அம்பாசமுத்திரம் தனியாா் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

தனியாா் பள்ளியில் பணியில் இருந்து விலகிய பெண்ணுக்கு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை திரும்ப கொடுக்க மறுத்த பள்ளி நிா்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளி

அம்பாசமுத்திரம் தனியாா் பள்ளியில் பணியில் இருந்து விலகிய பெண்ணுக்கு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை திரும்ப கொடுக்க மறுத்த பள்ளி நிா்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த நம்பிராஜன் மனைவி ராஜசங்கீதா. இவா், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் கணக்கா் மற்றும் காசாளராக பணியில் சோ்ந்தாராம். அப்போது, அவா் தனது பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்களை பள்ளி நிா்வாகத்திடம் சமா்ப்பித்துள்ளாா்.

பின்னா், அவா் கருவுற்ன் காரணமாக மருத்துவா்களின் ஆலோசனைப்படி, கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் பணியில் இருந்து விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளாா். அப்போது, தான் கொடுத்த பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்களை திரும்பக் கேட்டாராம். ஆனால், ரூ.30 ஆயிரம் செலுத்தினால்தான் சான்றிதழ்களை திரும்ப தருவோம் என பள்ளி நிா்வாகம் தெரிவித்ததாம்.

இதுகுறித்து திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கடந்த மே 6ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சமீனா, சான்றிதழை திரும்ப ராஜசங்கீதாவுக்கு கொடுக்கவும், இழப்பீடாக ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் பள்ளி நிா்வாகம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com