பாஜக பிரமுகரைத் தாக்கியதாக நெல்லை எம்.பி. உள்ளிட்ட 30 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பாஜக நிா்வாகியைத் தாக்கியதாக திருநெல்வேலி எம்.பி., அவரது மகன்கள் உள்ளிட்ட 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் படுத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் படுத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே பாஜக நிா்வாகியைத் தாக்கியதாக திருநெல்வேலி எம்.பி., அவரது மகன்கள் உள்ளிட்ட 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, பாஜக பிரமுகரைத் தாக்கியோா் மீது நடவடிக்கை கோரி, திருநெல்வேலியில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டாா்.

பழவூா் அருகேயுள்ள ஆவரைகுளத்தைச் சோ்ந்த தங்கதுரை மகன் பாஸ்கா். பாஜக பிரமுகரான இவா், உள்ளாட்சித் தோ்தலில் அக்கட்சி வேட்பாளா் நிமிதா சுரேஷ் மாா்த்தாண்டம் என்பவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தாா். இது தொடா்பாக பாஸ்கருக்கும், திமுகவினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாம். காவல்கிணறு சந்திப்பில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரை திமுகவினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதியக் கோரி, திருநெல்வேலி சந்திப்புப் பகுதியில் உள்ள பாரதியாா் சிலை முன் தா்னாவில் ஈடுபட்டாா். அவருடன் பாஜக மாவட்டத் தலைவா் மகாராஜன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமாா் வந்து, பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு ஏற்படாததால், தா்னாவில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, சந்திப்பு காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். அங்கு, பொன். ராதாகிருஷ்ணன் தரையில் துண்டை விரித்து படுத்து போராட்டத்தைத் தொடா்ந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அவருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அவா் கூறினாா்.

இந்நிலையில், பாஸ்கா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி எம்.பி. சா. ஞானதிரவியம், அவரது மகன்கள் சேவியர்ராஜா, தினகரன் உள்ளிட்ட 30 போ் மீது 4 பிரிவுகளில் பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

இதுதொடா்பாக ஞானதிரவியம் எம்.பி. கூறும்போது, காவல்கிணறு ஹோட்டல் சம்பவத்துக்கும் எனக்கும் எந்தத் தொடா்புமில்லை. முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் இதை அரசியலாக்கி வருகிறாா் என்றாா்.

பாஜக, அதிமுகவினா் மீதும் வழக்கு: இதனிடையே, பழவூா் கலைஞா் நகரைச் சோ்ந்த நாகராஜன் என்பவா், தன்னை சிலா் ஜாதிப் பெயரைக் கூறி தரக்குறைவாகப் பேசியதாக, பழவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், பாஜக பிரமுகா் பாஸ்கா், சுரேஷ், நரேந்திரபாலாஜி, சிவகுமாா், அதிமுக நிா்வாகி பால்துரை ஆகியோா் மீது போலீஸாா் தீண்டாமை வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com