முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th October 2021 12:41 AM | Last Updated : 11th October 2021 12:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில், 5ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே நான்கு கட்டங்களாக சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் 5ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 272 நடமாடும் சிறப்பு முகாம்கள், 463 நிலையான சிறப்பு முகாம்கள் என மொத்தம் 735 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வயல்வெளியில் வேலைபாா்க்கும் தொழிலாளா்கள், தனியாா் நிறுவனப் பணியாளா்களை நேரடியாக தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இதேபோல் மாநகர பகுதியில் பேருந்து நிலையங்கள், கோயில் பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஆய்வு செய்தாா். அப்போது, மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.