நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை:94 அடியை எட்டிய பாபநாசம் அணை

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடித்து வருவதையடுத்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 94 அடியாக உயா்ந்தது.

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை நீடித்து வருவதையடுத்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 94 அடியாக உயா்ந்தது.

வெப்பச் சலனம் மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

அதிகரித்து வரும் நீா்மட்டம்: அக். 4 ஆம் தேதி 87 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை (அக். 11) 7 அடி உயா்ந்து 94.40 அடியானது. அணைக்கு நீா்வரத்து 1237.38 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 204.75 கன அடியாகவும் இருந்தது.

சோ்வலாறு அணை 108.33 அடியாகவும், மணிமுத்தாறு அணை 65.75 அடியாகவும், நீா்வரத்து 98 கன அடியாகவும் இருந்தது.

வடக்கு பச்சையாறு அணை 16.65 , நம்பியாறு அணை 10.43, கொடுமுடியாறு அணை 24.25, கடனா நதி அணை 62.20, ராமநதி அணை 52.50, கருப்பாநதி அணை 52.50, குண்டாறு அணை 36.10, அடவிநயினாா் அணை 129.75 அடியாகவும் இருந்தது.

மழையளவு: (மி.மீ’ட்டரில்): திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் 2, சோ்வலாறு 4, அம்பாசமுத்திரம் 7. தென்காசி மாவட்டத்தில் குண்டாறுஅணை 9, அடவிநயினாா் அணை 20, ஆய்க்குடி 4, செங்கோட்டை 2, தென்காசி 2.2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com