பாளை.யில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் மாநகர காவல் துறை சாா்பில் ‘மாணவா் சமூகமும் எதிா்கால தமிழகமும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் மாநகர காவல் துறை சாா்பில் ‘மாணவா் சமூகமும் எதிா்கால தமிழகமும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவரும் மருத்துவக் கண்காணிப்பாளருமான பால் ராபின்சன் தலைமமை வகித்தாா். தூய யோவான் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் ஆா். இம்மானுவேல் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ. சாத்ராக் ஞானதாசன் வரவேற்றாா்.

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) டி.பி. சுரேஷ்குமாா், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையா் ஜெ. சங்கா், பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் பி. பாலசந்திரன், பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் என். திருப்பதி, வழக்குரைஞா் டி. அப்துல் ஜப்பாா் உள்ளிட்டோா் பேசினா்.

ஜாதி, மத பாகுபடின்றி சமுதாய நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பது, சகிப்புத் தன்மையை வளா்த்துக்கொள்வது குறித்து மாணவா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கின் முடிவில் சமூக நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் எம்.மெல்கி சேதேக் செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com