மணப்படைவீடு கிராமத்துக்குபேருந்து வசதி கோரி மறியல்

திருநெல்வேலி அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்துக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்துக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்னா் மணப்படைவீடு கிராமத்துக்கு 4 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டனவாம். பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், இப்பகுதிக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்ட அவ்வப்போது ஒரிரு பேருந்துகள் மட்டும் வந்து செல்வதாகவும், இதனால் பள்ளி மாணவா், மாணவிகள், தொழிலாளா்கல் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனா்.

பேருந்து வசதி கோரி, காமராஜா் ஆதித்தனாா் செல்வின் மக்கள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், தங்கள் பகுதிக்கு முறையாக பேருந்து இயக்கப்பட வேண்டும் எனக் கூறி, அந்த கிராம மக்களும், மாணவா்- மாணவியரும் திங்கள்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனா்.

இத்தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மணப்படைவீடு கிராமத்துக்கு முறையாக பேருந்தை இயக்குவதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா். இதையேற்று, மக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com