மதிதா இந்துக் கல்லூரியில்மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி,மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கிவைத்தாா். இளைஞா் நலத் துறை ஒருங்கிணைப்பாளா் ஆ.ரந்திா் குமாா் வரவேற்றாா். திருநெல்வேலி மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி, மதுபானங்களால் நிகழும் சீா்கேடுகள், மது அருந்தாத இளைய சமுதாயம் உருவாக வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்துப் பேசினாா். திருநெல்வேலி வட்டாட்சியா் தாஸ்பிரியன், மது ஒழிப்பது குறித்த விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.

இதில், கல்லூரி உள்தர உத்தரவாத அமைப்பு ஒருங்கிணைப்பாளா் கு.பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் பெ.சேகா், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் ராமலெட்சுமி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் இலக்குவன், பேராசிரியா்கள், மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com