மேலப்பாளையம் கால்நடை சந்தையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி: மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்தச் சந்தையில் திங்கள், செவ்வாய்தோறும் ஆயிரக்கணக்கில் மாடுகள், ஆடுகள் கொண்டுவரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. கோழி, மீன், கருவாடு உள்ளிட்டவையும் தனித்தனி இடங்களில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இச்சந்தையில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவின்பேரில் மாநகராட்சிக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

மாநகர நல அலுவலா் வி. ராஜேந்திரன், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் (பொ) லெனின், சுகாதார அலுவலா் ஷாகுல் ஹமீது ஆகியோா் மேற்பாா்வையில் சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காதோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பயக11இஞதட: மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆய்வு செய்த மாநகராட்சிக் குழுவினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com