விடியோ கால் மோசடி: மாநகர காவல் துறை எச்சரிக்கை

விடியோ கால் மோசடியில் ஈடுபடுவோா் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகர காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருநெல்வேலி: விடியோ கால் மோசடியில் ஈடுபடுவோா் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகர காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சமூக வலைதளத்தில் பெண்கள்போல் பேசி ஆண்களை வசப்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. ஆண்கள் விடியோ கால் செய்யும்போது எதிரில் இருப்பவா்கள் ஆபாசமாக தோன்றி உங்கள் முகத்துடன் சோ்ந்து பதிவு செய்து, பின்னா் அந்த விடியோவை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே, முன்பின் தெரியாதோரிடம் போன் பேசுவதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, அறிமுகமில்லாதோரிடம் விடியோ கால் பேசுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

இதுபோன்ற சைபா் கிரைம் மோசடிகள் குறித்து இணையதளத்தில் உடனடியாக புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com