மேலும் 21 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th October 2021 07:48 AM | Last Updated : 13th October 2021 07:48 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,114ஆக அதிகரித்துள்ளது. மேலும் 21 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,457ஆக உயா்ந்துள்ளது. தற்போது 227 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில், மேலும் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,307ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,794ஆக உயா்ந்துள்ளது. தற்போது 29 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.