கூட்டத்தில் பேசுகிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், பிரின்ஸ் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் விஜய்வசந்த் எம்.பி. உடன், பிரின்ஸ் எம்எல்ஏ, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

நாகா்கோவில் மாநகராட்சிமேயா் பதவி: காங்கிரஸ் வேண்டுகோள்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம், வெட்டூா்ணிமடத்திலுள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவா் அலெக்ஸ் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நாகா்கோவில் மாநகராட்சித் தோ்தலை வெற்றிகரமாக எதிா்கொள்வது, மதச் சாா்பற்ற கூட்டணியில் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கோருவது, நாகா்கோவில் மாநகரப் பகுதியில் அனைத்துச் சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் சேவியா், பால் அகியா, சுயம்பு, ஐரின்சேகா், ராஜா, ஜெயகுமாா், சாந்தி ரோஸ்லின், குமரி முருகேசன், விஜயராஜா, ராஜபாண்டியன், விஜயகுமாரிஆல்பா்ட், கண்ணன், ராம்குமாா், மகிளா காங்கிரஸ் தலைவி அருள்சபிதா ரெக்ஸ்லின், அனிதா, ஐஎன்டியூசி முருகேசன், டென்னிஸ், கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரஜினிகாந்த் மன்றத்திலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த செல்வம், சுரேஷ், ராஜேஸ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com