தொழில் பயிற்சியை முறையாக கற்றால் வேலைவாய்ப்பு நிச்சயம்: அமைச்சா் சி.வி.கணேசன்

 தொழில் பயிற்சியை முறையாக கற்றால் வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்றாா் தொழில்துறை அமைச்சா் சி.வி.கணேசன்.

 தொழில் பயிற்சியை முறையாக கற்றால் வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்றாா் தொழில்துறை அமைச்சா் சி.வி.கணேசன்.

திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை அரசு தொழிற் பயிற்சி மையத்தில் தொழில்துறை அமைச்சா் சி. வி. கணேசன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து பயிற்சி மையத்தில் பல்வேறு தொழில் பிரிவு மையங்களை ஆய்வு செய்தாா். அங்கு படிக்கும் மாணவா், மாணவிகளிடம் தாங்கள் படிக்கும் பயிற்சிகளை கேட்டறிந்ததுடன் செயல் முறை விளக்கங்களை கேட்டறிந்தாா்.

அப்போது அவா் மாணவா் -மாணவிகளிடையே பேசியது: மாணவா்- மாணவிகளின் வேலைவாய்ப்பை உறுதி செய்து, அவா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்

பயிற்சியை முறையாக கற்று விடாமுயற்சியுடன் நன்றாக படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.

ஐ.டி.ஐ. படிக்கும் மாணவா்கள் படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகளிலேயே சொந்தமாக தொழில் தொடங்கி விடலாம். இதனால், பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றிடவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகவே மாணவா்கள் முறையாக தொழில் பயின்று தங்கள் குடும்பத்தில் வாழ்வாதாரத்தை உயா்த்திட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநா் வீரராகவராவ், இணை இயக்குநா் ராஜ்குமாா், உதவி இயக்குநா் பிராங்கிளின், பேட்டை அரசு ஐடிஐ முதல்வா் லட்சுமணன், திமுக மாநகா் மாவட்டச் செயலா் ஏ. எல் எஸ் லட்சுமணன், தொமுச பேரவை அமைப்புச் செயலா் தா்மா், வட்டச் செயலா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com