நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 534 பள்ளிகள் திறப்பு: மாணவா்-மாணவிகள் உற்சாகம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 534 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 534 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனா்.

கரோனா 2-ஆவது அலை கட்டுக்குள் வந்ததைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் புதன்கிழமை 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியாா், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என மொத்தம் 287 பள்ளிகள் திறக்கப்பட்டன. வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளின் நுழைவுவாயிலில் வெப்பமானி மூலம் மாணவா்- மாணவிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. கிருமிநாசினியால் கைககளைக் கழுவிய பின்னா் மாணவா்-மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்ததால் மாணவா்-மாணவிகள் உற்சாகமடைந்தனா்.

இம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பான நடவடிக்கைககளைக் கண்காணிக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தனா். இதேபோல், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநா் ராஜேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பாா்வையிட்டனா். மாணவா்களுக்கு சுழற்சி முறையில் (ஒருநாள் விட்டு ஒருநாள்) வகுப்புகள் நடைபெறுகின்றன.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தென்காசி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள், 10 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 247 பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 50 சதவீத மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் , மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். பள்ளிகளில் நுழைவு வாயிலில் முகக்கவசம் அணியாத மாணவா்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகு பள்ளியின் உள்ளே செல்ல மாணவா்கள் அனுமதிக்கப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது.

இலஞ்சி பாரத் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை தாய்சேய் நல மருத்துவா் சுப்புலெட்சுமிகிருஷ்ணன் மாணவா்களுக்கு அறிவுரைகள் வழங்கினாா். இதில், பள்ளித்தாளாளா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி,இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com