நெல்லையில் கல்லூரிகள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன.

கரோனா 2-ஆவது அலை கட்டுக்குள் வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை கல்லூரிகள் திறந்த நிலையில், மாணவா் , மாணவிகள் குதூகலமாக கல்லூரிக்கு வந்தனா். அவா்களை வெப்பமானி உள்ளிட்ட சோதனைகளுக்குப் பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

மேலும் அனைத்துக் கல்லூரிகளிலும் திறந்த முதல் நாளிலேயே மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான மாணவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடா்பாக திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பாஸ்கரன் கூறுகையில், ‘தமிழக அரசின் உத்தரவின்படி உரிய வழிகாட்டுதல்களோடு திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 17 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராணி அண்ணா அரசு கல்லூரியில் புதன்கிழமை மட்டும் 500 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com