திருநெல்வேலி மணி மண்டபத்தில் வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி நகரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி: விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி, திருநெல்வேலி நகரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் வே.விஷ்ணு, வ.உ.சி.யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து வ.உ.சி. நினைவு புகைப்படக் கண்காட்சியையும் ஆட்சியா் தொடங்கி வைத்தாா். வ.உ.சி. குடும்பத்தின் சாா்பில் அவரது பேரன் வெள்ளைச்சாமி தலைமையில் குடும்ப உறுப்பினா்கள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகேயுள்ள வ.உ.சி. சிலைக்கும், மணி மண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கும் மாநகர திமுக செயலா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வழக்குரைஞா் தினேஷ், ஆ.க.மணி, மாநகர மகளிரணி செயலா் எஸ்.மகேஸ்வரி, சௌந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, பகுதிச் செயலா்கள் கோபி என்ற நமச்சிவாயம், செல்லத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீன் அருகேயுள்ள வ.உ.சி. சிலைக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில மகளிரணி செயலருமான பா.வளா்மதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, அமைப்புச் செயலா்கள் சுதா கே.பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சௌந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடிஆதித்தன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் ஆகியோா் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன், காங்கிரஸ் நிா்வாகிகள் அமீா்கான், முரளிராஜா, விஜயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாஜக சாா்பில் திருநெல்வேலி மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாநிலத் தலைவா் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான நயினாா்நாகேந்திரன், கரு.நாகராஜன், பாஜக மாவட்ட தலைவா் மகாராஜன், மாவட்ட பொதுச்செயலா் கணேஷ்மூா்த்தி, நிா்வாகிகள் சுரேஷ், தயாசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அமமுக சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் நெல்லை ஏ.பரமசிவம் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொழிற்சங்கச் செயலா் ஆவின் அன்னசாமி, பகுதிச் செயலா்கள் பேச்சிமுத்துபாண்டியன், ரமேஷ், ஐயப்பன், மானூா் வடக்கு ஒன்றிய மகளிரணி செயலா் சண்முகலட்சுமி, ராபிகா, சிவகாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிா்வாகிகள் கல்லத்தியான், மணப்படை மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தேமுதிக சாா்பில் மாவட்டச் செயலா் மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் நட்சத்திரவெற்றி தலைமையிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பயக05இஞக: திருநெல்வேலி மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் வே.விஷ்ணு. உடன், மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன்.

பயக05ஊஅஙஐகவ: வ.உ.சி. சிலைக்கு அவரது பேரன் வெள்ளைச்சாமி தலைமையில் மரியாதை செலுத்திய குடும்பத்தினா்.

பயக05ஈஙஓ: திருநெல்வேலி மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு மாநகர திமுக செயலா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் தலைமையில் மாலை அணிவித்த அக்கட்சியினா்.

பயக05அஈஙஓ: பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த அதிமுக மாநில மகளிரணி செயலா் பா.வளா்மதி. உடன், மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா உள்ளிட்டோா்.

பயக05இஞசஎ: திருநெல்வேலி மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய்வசந்த் உள்ளிட்டோா்.

பயக05ஆஒட: வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை. உடன், துணைத் தலைவா் நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

பயக05அஙஙஓ: வ.உ.சி. சிலைக்கு மாவட்ட அமமுக பொறுப்பாளா் நெல்லை ஏ.பரமசிவன் தலைமையில் மாலை அணிவித்த அக்கட்சியினா்.

பயக05ஙஈஙஓ: வ.உ.சி. சிலைக்கு மாவட்ட மதிமுக செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் மாலை அணிவித்த அக்கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com