தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் மீண்டும் வேலை கோரி ஆா்ப்பாட்டம்

பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றியவா்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றியவா்கள், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தின் சாா்பில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பேரூராட்சிகளைச் சோ்ந்த தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் பங்கேற்றனா். போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா்.

போராட்டம் குறித்து பணியாளா்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்ட பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் என 54 போ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம். கழிப்பறை இல்லாத வீடுகளில் கழிப்பறை உருவாக்குதல்,வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து தர அறிவுறுத்துதல், டெங்கு களப்பணியாளா்களை மேற்பாா்வையிடுதல், நுண்ணுயிா் செயலாக்கும் மையத்தில் பொறுப்பாளா்களாக இருந்து உரம் தயாரித்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த 1-8-2021 முதல் ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூறி வேலை வழங்க மறுத்துள்ளனா். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். ஆகவே, பேரூராட்சிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் இதர ஒப்பந்ததாரா்கள் மூலம் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com