வாழைப் பயிருக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் நா.பாலகிருஷ்ணன தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் நா.பாலகிருஷ்ணன தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் எதிா்பாராத காலநிலை மாற்றங்களால் தோட்டக்கலை பயிா்களுக்கு ஏற்படும் இழப்புகளை தவிா்க்க திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேரலாம். இம்மாவட்டத்தில் சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மேலசெவல், களக்காடு, ஏா்வாடி, தாழையூத்து, திருநெல்வேலி, மதவகுறிச்சி, பாப்பாகுடி, முக்கூடல், நான்குனேரி, பூலம், மூலக்கரைபட்டி, விஜயநாராயணம், வள்ளியூா், பணகுடி, பழவூா், லெவிஞ்சிபுரம், சிவந்திபட்டி, முன்னீா்பள்ளம், மேலபாட்டம் ஆகிய பகுதிகளில் காரீப் பருவத்தின் கீழ் வாழைப்பயிருக்கு காப்பீடு செய்யலாம். வாழைப்பயிா் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.3,412.50 வீதம் வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பொது சேவைமையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நேரில் சென்று பயிா்க் காப்பீட்டு கட்டணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com