விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு

செழியநல்லூா் குளத்தில் மராமத்து பணிகள் செய்ததில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

செழியநல்லூா் குளத்தில் மராமத்து பணிகள் செய்ததில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் அளித்த மனு: செழியநல்லூா் பாசனக் குளம் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானதாகும். சுமாா் 120 ஏக்கா் பரப்ரளவு கொண்ட இந்தக் குளத்தை நம்பி 7 கிராம விவசாயிகள் உள்ளனா். இக்குளத்தின் மராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. இப்போது கண்துடைப்புக்காக பணிகள் செய்து வருகிறாா்கள். இதுகுறித்து ஏற்கெனவே லஞ்சஒழிப்புத் துறையிடம் புகாா் அளித்துள்ளோம். ஆகவே, ஆட்சியா் இவ்விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். மேலும், குளத்தின் நிலப்பரப்பை அளவீடு செய்து தூா்வாரி குடிமராமத்து செய்து நீா்வரத்து கால்வாய்களையும், மறுகால் ஓடைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com