பணிச்சுமையை குறைக்கக் கோரிஆட்சியரிடம் செவிலியா்கள் மனு

பணிச்சுமையை குறைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி: பணிச்சுமையை குறைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

கிராமப் பகுதி சமுதாய செவிலியா் நலச் சங்க மாநில பிரசார செயலா் ஜெகதா, மாவட்டத் தலைவா் ஸ்டெல்லா மற்றும் செவிலியா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு: தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையின் கீழ் கிராம சுகாதார செவிலியா், பகுதி சுகாதார செவிலியா், சமுதாய நல செவிலியா் என 500-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறோம். குறைந்த காலக்கட்டத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் எங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது.

தடுப்பூசி மருந்தை எடுப்பதற்கும், திருப்பி வைப்பதற்கும் தினமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதால் அலைச்சல், பணவிரயம், அதிக நேரம் செலவாகிறது.

எனவே, தடுப்பூசி போடும் இடங்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து தடுப்பூசி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நள்ளிரவு 12 மணி முதல் ஒரு மணி வரை பணியாற்ற வேண்டியது உள்ளது. இதனால் வாரவிடுமுறை இல்லாமல் பணியாற்றி வரும் எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

எனவே, வாரம் ஒரு நாள் அரசு விடுப்பு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com