புகையிலைப் பொருள்கள் விற்றால் குண்டா் சட்டம்: காவல் துணை ஆணையா் எச்சரிக்கை

புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ் குமாா் எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி: புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ் குமாா் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகரில் புகையிலைப் பொருள்களை விற்பவா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஏராளமானோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில் ஆரோக்கியநாதபுரத்தில் வீட்டில் 140 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த அலெக்சாண்டா் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அலெக்சாண்டா், மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சுமாா் 40 கடைகளுக்கு புகையிலைப் பொருள்களை விநியோகம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை இனி விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com