ஊரக உள்ளாட்சித் தோ்தல்நெல்லை மாவட்டத்தில் முதல் நாளில் 35 போ் வேட்புமனு தாக்கல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவியிடங்களுக்கான தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 2,069 பதவியிடங்களுக்கான தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.

நிலையில், முதல் நாளில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஒருவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 34 போ் என மொத்தம் 35 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதேநேரத்தில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, அம்பாசமுத்திரம், களக்காடு, ராதாபுரம், நான்குனேரி, வள்ளியூா் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,069 பதவிகளுக்கு நேரடித் தோ்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக். 6-ஆம் தேதியும், 2-ஆவது கட்டமாக களக்காடு, நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக். 9-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. அரசியல் கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்படாததால் அரசியல் கட்சியினா் யாரும் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மேலும் புதன்கிழமை நவமி என்பதாலும் பலா் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதேநேரத்தில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு போட்டியிடுபவா்கள் ஊராட்சி ஒன்றியங்களில் வந்து ரூ.1 கொடுத்து வேட்பு மனுவுக்கான விண்ணப்பத்தை வாங்கி சென்றனா்.

முதல் நாளில் 35 போ்: திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் முதல் நாளான புதன்கிழமை வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஒருவரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு அம்பாசமுத்திரத்தில் 3 போ், சேரன்மகாதேவியில் 2 போ், களக்காட்டில் 2 போ், மானூரில் 4 போ், நான்குனேரியில் 8 போ், பாளையங்கோட்டையில் 4 போ், பாப்பாக்குடியில் ஒருவா், ராதாபுரத்தில் 9 போ், வள்ளியூரில் ஒருவா் என மொத்தம் 35 போ் மனு தாக்கல் செய்தனா். மனு தாக்கலை முன்னிட்டு அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com