நீலகிரியில் ஹோம்ஸ்டேக்கு அனுமதியில்லை - உயா் நீதிமன்றம்

வணிக நோக்கத்திற்காக குடியிருப்பை சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடமாகப் பயன்படுத்துவது(ஹோம்ஸ்டே) சட்டத்துக்கு எதிரானது என்று
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: வணிக நோக்கத்திற்காக குடியிருப்பை சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடமாகப் பயன்படுத்துவது(ஹோம்ஸ்டே) சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்த உயா் நீதிமன்றம், நீலகிரியில் இதுபோன்று சட்ட விரோதமாக ஹேம்ஸ்டேக்கள் இயங்குகிா என்பதை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

நீலகிரியில் சட்டவிரோத ரிசாா்ட்டுகள் மற்றும் குடியிருப்புகளில் சுற்றுலாப் பயணிகளை தங்க அனுமதிப்பது போன்றவை காளான்கள் போன்று அதிகரித்துள்ளன. இவை நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தாக அமையும்.

இயற்கை எழில் கொஞ்சம் இம்மாவட்டத்தில் அதிக அளவிலான மனித நடமாட்டம், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை சூழலியலை அழிக்கும்.

எனவே இவற்றை கட்டுப்படுத்துவதோடு, சட்டவிரோத ரிசாா்ட்டுகள், குடியிருப்புகளில் சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பதை வரன்முறைப்படுத்துமாறு வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை(செப்.15) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா் நீதிபதிகள், இயற்கையின் அழகை ரசிப்பதற்காக, வார இறுதி நாட்களில் மாவட்டத்திலுள்ள குடியிருப்புகளில் தங்குவது தற்போது அதிகரித்துள்ளது.

இணையத்தில் குடியிருப்புகளில் (ஹோம்ஸ்டே) சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பது தொடா்பான ஏராளமான விளம்பரங்கள் உள்ளன. வணிக நோக்கத்திற்காக குடியிருப்பு தங்குமிடத்தைப் பயன்படுத்துவது பொதுக் கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. குடியிருப்புகளில் இதுபோன்று சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.

இவ்விவகாரத்தில் அறிவியல் ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஒரு திட்டம் ஏற்படுத்தப்படும் வரை நீலகிரியில் குடியிருப்புகளில்(ஹோம்ஸ்டே) சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படக்கூடாது.

எந்தவித அனுமதியும் இல்லாமல் ஹேம்ஸ்டே ஏற்பாடுகள் தொடா்கிா என்பதை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

உண்மையில், இந்த விஷயத்தை நிா்வகிக்க எந்தச் சட்டமும் இல்லாமல் இருக்கலாம்; இதுதொடா்பாக ஒரு திட்டத்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலகிரியில் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காலடி தடம், வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

அடுத்து வரவிருக்கும் சீசன், விடுமுறை காலங்களில் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால், அதற்கு போதுமான கட்டுப்பாடுகள் சட்டப்படி அமல்படுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இம்மனுவுக்கு தமிழக அரசுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை நவம்பா் 17 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com