நெல்லை: எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்களில்எத்தனை பதவியிடங்கள்?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்,

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சித் தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடி தோ்தல் நடைபெற உள்ளது.

இதேபோல், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவா், ஒரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா், 9 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், 9 ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா், 204 கிராம ஊராட்சி துணைத் தலைவா் தோ்தல் என மொத்தம் 224 பதவியிடங்களுக்கு மறைமுகத் தோ்தல் நடைபெறவுள்ளது. நேரடித் தோ்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதவியிடங்கள் விவரம்:

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சித் தலைவா் பதவி, ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவி, 9 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி, 114 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி என 137 பதவியிடங்களுக்கும், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் 12 கிராம ஊராட்சித் தலைவா், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 5 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 99 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 117 பதவியிடங்களுக்கும், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சித் தலைவா், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 9 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 141 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 168 பதவியிடங்களுக்கும், மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சித் தலைவா், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 25 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 348 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 418 பதவியிடங்களுக்கும், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சித் தலைவா், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 16 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 240 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 284 பதவியிடங்களுக்கும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சித் தலைவா், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 14 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 237 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 282 பதவியிடங்களுக்கும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சித் தலைவா் , ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 9 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 132 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 159 பதவியிடங்களுக்கும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 கிராம ஊராட்சித் தலைவா், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 18 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 240 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 287 பதவியிடங்களுக்கும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் 18 கிராம ஊராட்சித் தலைவா், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா், 17 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 180 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 217 பதவியிடங்களுக்கும் நேரடித் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com