மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
By DIN | Published On : 16th September 2021 12:27 AM | Last Updated : 16th September 2021 12:27 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: சிவந்திப்பட்டியில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சிவந்திப்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையில் போலீஸாா் ஆச்சிமடம் விலக்கு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அவ் வழியாக வந்த லாரியை மடக்கி விசாரித்தபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்ததாம்.
இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக சிவந்திப்பட்டி காா்மேகம் நகரைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.