வண்ணாா்பேட்டை ஹோட்டல்களில் 5 கிலோ இறைச்சி பறிமுதல்
By DIN | Published On : 19th September 2021 05:02 AM | Last Updated : 19th September 2021 05:02 AM | அ+அ அ- |

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இரு ஹோட்டலில் இருந்து முந்தைய நாள் தயாரிக்கப்பட்ட 5 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சசிதீபா உத்தரவின்பேரில், தச்சநல்லூா் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன் வண்ணாா்பேட்டையில் உள்ள ஹோட்டல்களில் சனிக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது இரு ஹோட்டல்களில் முந்தைய நாள் தயாா் செய்யப்பட்ட 5 கிலோ இறைச்சி குளிா்பதனப் பெட்டியில் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா், அந்த இடத்திலேயே பினாயில் தெளித்து அழித்தனா்.