மகாத்மா காந்தி பிறந்த நாள்: அருங்காட்சியகத்தில் போட்டிகள்
By DIN | Published On : 23rd September 2021 07:46 AM | Last Updated : 23rd September 2021 07:46 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுதொடா்பாக, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை அரிமா சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு மகாத்மா காந்தி என்ற தலைப்பில் மாறுவேட போட்டியும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்-மாணவிகளுக்கு மகாத்மா காந்தியின் வாசகம் சொல்லுதல் போட்டியும் நடைபெற உள்ளது.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ’எனக்கு பிடித்த தேசத் தலைவா்– மகாத்மா’ என்கிற என்கிற தலைப்பிலும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவா்களுக்கு ‘மகாத்மாவும் இந்திய விடுதலையும்’ என்கிற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது.
மேற்கண்ட போட்டிகள் அக்டோபா் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும். போட்டியில் எழுதுவதற்கும், வரைவதற்கும் தேவையான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். மாணவா்கள் தங்களுக்கு தேவையான அட்டை, எழுது பொருள்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற எண்ணில் கட்செவி அஞ்சலில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.