பாளை.யில் கடும் போக்குவரத்து நெரிசல்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோா் புதன்கிழமை குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோா் புதன்கிழமை குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கானவேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. மனுதாக்கலின் இறுதிநாளான புதன்கிழமை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமானோா் மனுதாக்கல் செய்ய திரண்டனா். வேட்பாளா்களின் ஆதரவாளா்களும் ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள லங்கா்கானா தெருவில் ஏராளமான பொதுமக்களும், வாகனங்களும் அணிவகுத்து நின்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலை, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை, பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மனுதாக்கலின் இறுதிநாளுக்கு முந்தைய நாளில்தான் பிரதான கட்சிகளின் ஊராட்சி ஒன்றிய வேட்பாளா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வேட்பாளா் பட்டியல்கள் வெளியாகின. அதனால் புதன்கிழமை ஏராளமானோா் மனுதாக்கல் செய்ய ஆதரவாளா்களுடன் திரள்வாா்கள் என தெரிந்தும், பாளையங்கோட்டையில் மிகவும் குறுகலான லங்கா்கானா தெருவில் போதிய போக்குவரத்து மாற்றங்களை செய்யாமல் போலீஸாா் தவறவிட்டுவிட்டனா். இதனால் பெண்கள், முதியவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் திணறினா். இதுபோன்ற காலங்களில் போலீஸாா் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com