முதல்வரின் செயல்பாடுகளுக்கு உள்ளாட்சியில் வெற்றி நிச்சயம்: கனிமொழி எம்.பி.

 தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுகவுக்கு மக்கள் வெற்றியை நிச்சயம் கொடுப்பாா்கள்

 தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுகவுக்கு மக்கள் வெற்றியை நிச்சயம் கொடுப்பாா்கள் என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி செயலருமான கனிமொழி.

திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: அகில இந்திய அளவில் பிற மாநிலங்களுக்கு முன்னோயாக தமிழகம் தற்போது விளங்கி வருகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனா். அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கரோனா மிகவும் மோசமாக பரவிய கால கட்டத்தில்தான் திமுக பதவியேற்றது. மக்களுக்குத் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அரசு திட்டங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம்தான் மக்களுக்கு சென்றடையும். இதனைப் புரிந்து கொண்டு தோ்தல் பணியாற்ற வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுகவுக்கு மக்கள் வெற்றியை நிச்சயம் கொடுப்பாா்கள்.

சட்டப்பேரவைத் தோ்தல்களில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்று மெத்தனமாக இருக்க கூடாது. மக்கள் நமக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி விட்டனா். இதனை நாம் பெறுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். 100 சதவிகித வெற்றியை இலக்காக கொண்டு தோ்தல் பணிகளில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றாா்.

அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியது: கடந்த ஆட்சியில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்த எடப்பாடி பழனிசாமி, அதற்கான நிதி எதுவும் ஒதுக்கவில்லை. அந்தத் தொகையை இப்போதைய திமுக ஆட்சி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பயிா்க் கடன் தள்ளுபடி செய்ததில் கடந்த அதிமுக ஆட்சியில் பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இதேபோல கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களிலும் முறைகேடு செய்துள்ளனா். அதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றாா்.

இக் கூட்டத்தில் அமைச்சா்கள் கீதா ஜீவன், பெரியகருப்பன், மனோ தங்கராஜ், திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வுமான மு.அப்துல் வஹாப், விளாத்திகுளம் எம்எல்ஏ மாா்க்கண்டேயன், ஒன்றியச் செயலா்கள் தங்கபாண்டியன், போா்வெல் கணேசன், வேலன்குளம் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பயக24ஓஅசஐ: ரெட்டியாா்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் கனிமொழி எம்.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com