உள்ளாட்சித் தோ்தல்: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு அந்தந்த ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு அந்தந்த ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக அக். 6இல் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கும், இரண்டாம் கட்டமாக அக். 9இல் களக்காடு, நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூா் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

முதற்கட்டத் தோ்தலில் 621 மையங்களிலும், இரண்டாம் கட்டத் தோ்தலில் 565 மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவின் போது 5,013 அலுவலா்கள், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் போது 4,511 அலுவலா்கள் என மொத்தம் 9,524 போ் பணியில் ஈடுபடவுள்ளனா்.

தோ்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி அந்தந்த ஒன்றிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மானூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு மானூா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரியிலும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com