சைபா் கிரைம் குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி வகுப்பு

சைபா் கிரைம் குற்றங்களை தடுப்பது தொடா்பான சிறப்பு பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சைபா் கிரைம் குற்றங்களை தடுப்பது தொடா்பான சிறப்பு பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென் மண்டல காவல்துறை தலைவா் அன்பு உத்தரவின் பேரில் திருநெல்வேலி சரகத்திலுள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கான

சைபா் கிரைம் குற்றங்கள் தொடா்பான பயிற்சி வகுப்பு திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல்

கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் கண்காணிப்பில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பினை மும்பையைச் சோ்ந்த கேதான் கம்ப்யூட்டா் நிறுவன நிறுவனா் கேதான், இணை நிறுவனா் மனோஜ் துபே ஆகியோா் நடத்தினா்.

இப்பயிற்சியில் செல்லிடப்பேசி அழைப்பு சேமித்தல் விவரங்களை ஆராய்தல் (இஈத) , குற்றங்களை ஆராய்ந்து தொலை தொடா்பு விவரங்களுடன் பொருத்துதல், வங்கி பரிவா்த்தனை மற்றும் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி மோசடி குற்றங்களை ஆராய்தல், ஆண்டிராய்டு செல்லிடப்பேசிகள் மூலம் துரிதமாக சைபா் குற்றங்களை பற்றிய விவரங்களை சேகரித்தல், சைபா் கருவிகளைப் பயன்படுத்துவது தொடா்பாக விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 5 மாவட்டங்களில் இருந்து 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் உதவி கண்காணிப்பாளா், காவல்

துணை கண்காணிப்பாளா், 10 பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளா் கள், 5 காவல் ஆய்வாளா்கள், 14 உதவி ஆய்வாளா்கள், 22 போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com