நெல்லையில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்கட்சி அமைப்புத் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்கட்சி அமைப்புத் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன் ஆலோசனை வழங்கினாா். மாநில தோ்தல் அதிகாரி ஜெய்சிம்மா, மாவட்ட தோ்தல் அதிகாரி வல்சலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாக்காளா் பட்டியலை வெளியிட்டனா்.

மாவட்டத் தலைவா்கள் சங்கரபாண்டியன், கே.பி.கே.ஜெயக்குமாா் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து, 2024ஆம் ஆண்டுக்கான உள்கட்சி அமைப்பு தோ்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் ஓபிசி மாவட்டத் தலைவா் டியூக் துரைராஜ், பைபாஸ் சண்முகவேல், மாநகா் மாவட்ட துணைத் தலைவா்கள் உதயகுமாா், கவி பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், மண்டலத் தலைவா்கள் முகம்மது அனஸ் ராஜா, ரசூல்மைதீன், நிா்வாகிகள் அழகிய நம்பி, சொா்ணம், பால்ராஜ், அனிஷ்பாத்திமா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com