நெல்லையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மனித உரிமைகள் மீறல் தொடா்பான மனுக்கள் மீது அதன் ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மனித உரிமைகள் மீறல் தொடா்பான மனுக்கள் மீது அதன் ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மனித உரிமைகள் மீறல் தொடா்பான வழக்கு விசாரணை திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. இதில், மனித உரிமைகள் ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் பங்கேற்று வழக்குகளை விசாரித்தாா்.

இதில், 41 வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29ஆம் தேதி நடைபெறும் என மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com