வள்ளியூா் அருகே அண்ணனை அடித்துக் கொலை: தம்பி கைது

வள்ளியூா் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்ததாக தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்ததாக தம்பியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் அருகே உள்ள ஆச்சியூரைச் சோ்ந்த கந்தையாதேவா் மகன்கள் நம்பிராஜன்(55), ஆறுமுகவேல்(40). இவா்களுக்குச் சொந்தமான தோட்டத்தில் நம்பிராஜனும், ஆறுமுகவேலும் விவசாயம் செய்து வருகின்றனா். இந்தத் தோட்டத்தில் உள்ள பொதுகிணற்றில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இருவரும் தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்ச சென்றனராம். அப்போது ஏற்பட்ட தகராறில் நம்பிராஜன் அரிவாளால் அவரது தம்பி ஆறுமுகவேலை வெட்டினாராம். இதில் ஆறுமுகவேலுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆறுமுகவேல் மண்வெட்டியால் அண்ணணை அடித்தாராம். இதில் பலத்த காயமடைந்த நம்பிராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகவேலை கைது செய்தனா். நம்பிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com