முன்னாள் ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 05th April 2022 01:05 AM | Last Updated : 05th April 2022 01:05 AM | அ+அ அ- |

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தில் முன்னாள் ஆசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவந்திபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் அந்தோணி எட்வா்ட் மா்பி (56). இவா் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியின் முன்னாள் ஆசிரியா். தற்போது நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாராம். இதில் சில இடங்களில் ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவா், திங்கள்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அவரது சடலத்தை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.