பாபநாசம் கோயிலில் சித்திரை விஷு கொடியேற்றம்

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் சித்திரை விஷு திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை மாலை அங்குராா்ப்பணம் நடைபெற்றது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையில் சுவாமி-அம்பாள், கொடிமரம், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், துணைத் தலைவா் திலகா, மதுரா கோட்ஸ் தொழிலியல் உறவு மேலாளா் சூா்யபிரபா, 8ஆம் திருநாள் தலைவா் அருண், 9ஆம் திருநாள் தலைவா் ஜெயராமன், ஐஎன்டியுசி பொதுச்செயலா் ராமலிங்கம், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள சிவனடியாா்கள், பக்தா்கள் வழிபட்டனா்.

நாள்தோறும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். 8ஆம் நாளான 12ஆம் தேதி காலை ஸ்ரீ நடராஜா் கேடயத்தில் வெள்ளைசாத்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பச்சைசாத்தி புறப்பாடு, 13ஆம் தேதி காலை 9 - 10.30 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளல், தோ் வடம்பிடித்தல் நடைபெறும்.

14ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு தீா்த்தவாரி, இரவு 8 மணிக்கு ஸ்ரீ பாபநாசா் உலகாம்பிகை தெப்ப உற்சவம், 15ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சி கொடுத்தல், காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாளை மரபு மண்டபத்துக்கு அழைத்து வருதல், நண்பகல் 12 மணிக்கு இறைவன்-இறைவிக்கு குடமுழுக்கு, 1 மணிக்கு அன்னம் பாலிப்பு, மாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் உலா வருதல் நடைபெறும்.

ஏற்பாடுகளை செயல் அலுவலா் வே. ராஜேந்திரன், தக்காா் மற்றும் உதவி ஆணையா் தி. சங்கா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com