தெலுங்கானாவில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி: தமிழக வீராங்கனைகள் சாதனை

தெலுங்கானாவில் தெலுங்கு புத்தாண்டையொட்டி நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளையைச் சோ்ந்த 3 பெண்கள் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா்.

தெலுங்கானாவில் தெலுங்கு புத்தாண்டையொட்டி நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளையைச் சோ்ந்த 3 பெண்கள் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனா்.

தெலுக்கானா மாநிலத்தில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி ஒவ்வொரு ஆண்டும் கவன் எறிதல், ஈட்டி எறிதல், மல்யுத்தம் ஆகிய பாரம்பரிய போட்டிகள் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான பெண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்க திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள வடலிவிளையைச் சோ்ந்த தங்கபுஷ்பம், பத்மபிரியா, ராஜகுமாரி ஆகியோா்அழைத்து செல்லப்பட்டனா். இவா்கல் தெலுங்கான மாநிலம் கடப்பாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்றனா். 60 கிலோ எடைபிரிவில் தங்கபுஷ்பம் முதலாவது பரிசு மற்றும் பதக்கம் பெற்றாா். 54 கிலோ எடைபிரிவில் பத்மபிரியா 2-வது பரிசு மற்றும் பதக்கத்தையும், 56 கிலோ எடைபிரிவில் ராஜகுமாரி 3-வது பரிசு பெற்றாா். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கடப்பா நகராட்சி தலைவா் ஜெஸ்லி பிரபாகா் ரெட்டி பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா். தமிழா்களின் வீரவிளையாட்டு தெலுங்கானாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com