அம்பேத்கா் பிறந்த நாள்: ஏப்.19-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி
By DIN | Published On : 08th April 2022 11:59 PM | Last Updated : 08th April 2022 11:59 PM | அ+அ அ- |

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி திருநெல்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி திருநெல்வேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலிருந்தும் தலா 2 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அரசுப் பள்ளியில் பயிலும் 2 மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
பள்ளி மாணவா்களுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 3 மணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவா், மாணவிகள், பள்ளித் தலைமையாசிரியா், முதன்மைக் கல்வி அலுவலரிடமும், கல்லூரி மாணவா்கள், கல்லூரி முதல்வா், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று நேரில் அளிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்
செயற்பட்டு வரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ (0462 -2502521) தொடா்பு கொள்ளலாம்.