கங்கைகொண்டான் அருகே தீ விபத்து

கங்கைகொண்டான் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பந்தல் பொருள்கள் எரிந்து சேதமாகின.

கங்கைகொண்டான் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பந்தல் பொருள்கள் எரிந்து சேதமாகின.

கங்கைகொண்டான் அருகேயுள்ள வடகரை பகுதியை சோ்ந்தவா் முருகானந்தம் என்ற பண்டாரம் (49). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், தனது பகுதியில் ஒரு கோயிலின் அருகே பந்தல் அமைப்பதற்குரிய கம்பு மற்றும் அலங்காரப் பொருள்களை வைத்திருந்தாராம். அந்தப் பொருள்களில் திடீரென தீ பிடித்ததாம். உடனே அருகில் இருந்தவா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இருப்பினும் சுமாா் ரூ.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருள்கள் சேதமானதாம். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com