நெல்லை மாநகரில் மெகா தூய்மைப் பணி
By DIN | Published On : 08th April 2022 12:29 AM | Last Updated : 08th April 2022 12:29 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் கீழ ரத வீதியில் மெகா தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து தூய்மைப் பணியை தொடங்கி வைத்ாா். துணைமேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். இந்த பணியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்று கீழ ரத வீதியில் உள்ள கழிவு நீரோடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைத்தனா்.
நிகழ்வில் திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, மண்டல உதவி ஆணையா் ( பொ) வெங்கட்ராமன், மாமன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு, சந்திரசேகா், சுகாதார அலுவலா் முருகேசன், சுகாதார ஆய்வாளா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
படவரி: பயக07இஞதட திருநெல்வேலி நகரம் கீழ ரதவீதியில் மெகா தூய்மைப் பணியை தொடங்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் மேயா் பி.எம்.சரவணன்.