பாளை. திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழாகொடியேற்றம்

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை திரிபுராந்தீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இத் திருவிழா வியாழக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தினமும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறவுள்ளது. ஏப். 15-ஆம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 16-ஆம் தேதி காலையில் தீா்த்தவாரியும், 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com