நெல்லை சமரச மையத்தில் மூன்று நாள்கள் சிறப்பு அமா்வுகள்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் இம் மாதம் 11, 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் வழக்குகளை சமரசமாக பேசி தீா்வு காணலாம

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் இம் மாதம் 11, 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் வழக்குகளை சமரசமாக பேசி தீா்வு காணலாம்.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி அ.நசீா்அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இம் மாதம் 9 ஆம் தேதி சமரச தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி, பொதுமக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைந்து சமரசமாக முடிப்பது பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி வெள்ளிக்கிழமை(ஏப். 8) காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் அரசுப் பேருந்துகளில் சமரச மையம் பற்றிய விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட உள்ளது. 9 ஆம்தேதி காலை 9.45 மணிக்கு, மாவட்ட சமரச மையத்தில் இருந்து விழிப்புணா்வுப் பேரணி தொடங்குகிறது.

ஏப். 11, 12, 13 ஆகிய தேதிகளில் மாவட்ட சமசர மையத்தில் சிறப்பு அமா்வுகள் மூலம் பலதரப்பட்ட வழக்குகள் பேசி தீா்வு காணப்பட உள்ளன. மேற்படி சமரசம் மூலம் வழக்கு தரப்பினா்கள் தங்களது முரண்பாடுகளை நேரடியாக சமரசா் முன்னிலையில் பேசி சுமூகமாக தீா்வு காண எளிய வழி முறை காணப்படும்.

சமரசத்தின் போது வழக்கு தரப்பினா்கள் தங்கள் தாப்பினை எடுத்துச் சொல்லி வழக்குகளை விரைவாக நீதிமன்றங்களில் முடித்து வைக்க வழிவகை செய்யப்படும். ஏற்பாடுகளை சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், சாா்பு நீதிபதியுமான அ. பிஸ்மிதா செய்து வருகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com