ஐடிஐ படித்தவா்களுக்கு தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்
By DIN | Published On : 13th April 2022 12:22 AM | Last Updated : 13th April 2022 04:43 AM | அ+அ அ- |

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று 2017 முதல் 21ஆம் நிதியாண்டுக ளுக்குள் அகில இந்திய தொழில் தோ்வில் தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்களுக்கு தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சாா்பில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இம்மாதம் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தொழில் பழகுநா்களை தோ்வு செய்ய உள்ளன.
ஐடிஐ தோ்ச்சி சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவை அவசியம்.
தொழில் பழகுநராக தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம்தோறும் ரூ. 7,700 முதல் ரூ.8,050 வரை உதவித்தொகை வழங்கப்படும். முடிவில் தோ்வு நடத்தப்பட்டு, தேசிய தொழில்பழகுநா் சான்றிதழும் வழங்கப்படும்.
தொழில்பழகுநா் சட்டம் 1961-ன் படி குறைந்தபட்சம் 30-க்குள்பட்ட பணியாளா்களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியாா் குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளா்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணையலாம்
மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பேட்டை, ஐடிஐ எதிரே, திருநெல்வேலி என்ற முகவரியிலோ அல்லது 04622-342432, 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.