சித்திரை திருவிழா: குறுக்குத் துறையில் வைர கிரீடமணிந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி பவனி

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கச் சப்பரத்தில் வைர கிரீடம் அணிந்து சுவாமி சிவப்பு சாத்தி வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கச் சப்பரத்தில் வைர கிரீடம் அணிந்து சுவாமி சிவப்பு சாத்தி வீதியுலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குட்பட்ட சுப்பிரமணிய சுவாமி குகைக்கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 7ஆம் நாளான செவ்வாய்க்கிழமை உருகு சட்டசேவை நடைபெற்றது. மாலையில் சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் வைர கிரீடம் அணிந்து நெல்லையப்பா் கோயில் ரதவீதிகளில் ஆறுமுகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து 13ஆம் தேதி வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி வீதியுலாவும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை, திருவாவடுதுறை ஆதீனம் கண்காணிப்பாளா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com