முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
ஆபரேஷன் கஞ்சா 2.0: நெல்லையில் 52 போ் மீது வழக்கு
By DIN | Published On : 29th April 2022 11:13 PM | Last Updated : 29th April 2022 11:13 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகா் பகுதியில் ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற பெயரில் போலீஸாா் ஒருமாதம் நடத்திய தீவிர சோதனையில் 52 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 52 போ் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 51 பேரிடமிருந்து ரூ.2,56,200 மதிப்புள்ள 25.620 கிலோ கஞ்சாவும், ரூ.13ஆயிரத்து 370 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
மேலும் ஒரு நான்குசக்கர வாகனமும், 7 இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
அதேபோல் மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனையில் ஈடுபட்டுவந்த 114 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 91ஆயிரத்து 264 மதிப்புள்ள 406.132 கிலோ குட்கா, ஒரு நான்குசக்கர வாகனம், 5 இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கரவாகனங்களும், ரூ.1 லட்சத்து 75ஆயிரத்து 330 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன என குறிப்பிட்டுள்ளாா்.